இந்நிகழ்ச்சியினை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலமானது பாலக்கோடு பேருந்து நிலையம், தக்காளி மார்க்கெட், கடைவீதி, எம்.ஜிரோடு வழியாக ஊர்வலமாக சென்று பேருராட்சியை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தின் போது ஸ்வச்ச தீபாவளி, சுப தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்றதுடன், குப்பை கொட்டும் இடங்களில் கண்டறிந்து மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க விழிப்புணர்வு மேற்கொள்ளுதல், தூய்மை குறித்து கோலம்வரைதல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைப்பெற்றது.
முன்னதாக பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மறுத்தல் மீண்டும் பயன்படுத்துதல் மறுசுழற்சி எனப்படும் ட்ரிபிள் ஆர் மையம் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்கள் காலணிகள் நல்ல துணிகள் உள்ளிட்ட பழைய பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலக்கோடு பேரூராட்சியில் இயற்கை தயாரிப்பு பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், அலுவலர்கள், பொதுமக்கள் தன்னார்வளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக