தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புக்காடு வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன, அவ்வப்போது இரை தேடி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்கு வருவது வழக்கம்,அதனை தொடர்ந்து இன்று, தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதன்(50) என்பரின் 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராமமக்கள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சிறுத்தை ஒன்று கிணற்றில் உள்ள பாறை இடுக்கில் படுத்துஉறுமிக் கொண்டிருப்பதை கண்ட கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை மீட்டனர், சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்த தகவல் அருகே உள்ள கிராமங்களுக்கு பரவியதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.