பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சி நாகனம்பட்டி கவுண்டர்கொட்டாய் பகுதியில் பாமக, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் விழாவுக்கு தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.வேலுமணி முன்னிலை வகித்தார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் 75 பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியும் புதிதாகவும் கட்சியில் இணைந்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பி.கே.குட்டி, ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், கிளை செயலாளர்கள் முருகன், தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற உறுப்பினர் வீரமணி நன்றி கூறினார்.