Type Here to Get Search Results !

தர்மபுரி அரசு டாஸ்மாக் குடோன் நுழைவுவாயில் பூட்டப்பட்டதால் பரபரப்பு.


தர்மபுரி மாவட்டத்தில், 67 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், தடங்கம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது.  இங்கிருந்து, அனைத்து கடைகளுக்கும் வாகனங்கள் மூலம், மது பாட்டில்கள் சப்ளை செய்யப்படுகிறது. இதில், மதுபாட்டில்களை வாகனங்களில் ஏற்றி, இறக்க கடந்த, 25 ஆண்டுகளாக,40 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக்கில் வருடம் ஒருவருக்கு, டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் மாற்றப்படும். இந்த நிலையில், ஒப்பந்ததாரர்கள் மாறினாலும், தொழிலாளர்கள் தொடர்ந்து, பணியில் நீடிப்பார்கள். திடீரென டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் தரப்பில், 15 புதிய சுமை தூக்கும் தொழிலாளர்களை டாஸ்மாக் குடோனில் சேர்த்துள்ளனர்.

ஏற்கனவே உள்ள, 31 பேர் புதிய பணியாளர்களுடன் சேர்ந்து, பணியாற்ற வேண்டுமென கூறினர். இங்கு பணியில் உள்ள நபர்களுக்கு, வேலை மற்றும் கூலி பற்றாக்குறை உள்ளது. இதில், புதிய நபர்களை உள்ளே அனுமதித்தவுடன், அவர்களுடன் சேர்ந்து, பணி செய்யாவிட்டால், குடோனை திறக்க முடியாது என பூட்டி வைத்துள்ளனர். இதன் காரணமாக, அப்பாவி சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை நியமிப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. இதற்கு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். இதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் துணை போகக்கூடாது என்றார்.


இது குறித்து, சி.ஐ.டி.யு., சுமைபணி தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடபதி கூறுகையில்,  புதிய தொழிலாளர்கள் நியமிக்க வேண்டாம் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதில், நடவடிக்கை இல்லையெனில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோனில், மது பாட்டில் ஏற்றும் மற்றும் இறக்கும் பணி முற்றிலும் நிறுத்தப்படும் என்றார். இதில், இரு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


இதனை அடுத்து புதிய ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டு பேசியபோது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக புதிய ஆட்களை மது பாட்டில் ஏற்றவும் இறக்கவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வயது முதிர்ச்சி அடைந்த காரணத்தினாலும் சரியான நேரத்தில் மதுபான கடைக்கு ஏற்றுமதி செய்து இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும்  வருகின்ற ஒன்றாம் தேதி முதல்  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மது பாட்டில்களை ஸ்கேன் செய்து ஏற்றுமதி செய்வதால் புதிதாக ஆட்கள் தேவைப்படுவதாலும் புதிய ஆட்களை தேர்வு செய்துள்ளதாகவும் ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து பணியாற்றுமாறு ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies