அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.7850/- ஐ ஆகவிலைப்படியுடன் வழங்கவேண்டும். பொங்கல் பரிசு தொகை ரூ. 500/- உயர்த்தி ரூ. 3000 ஆக வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஈம சடங்கு தொகை ரூ. 25000/- ஐ வழங்கவேண்டும். மாத இறுதி வேலை நாளில் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வு பெறும் நாளிலே அனைத்து பணப்பலன்கைள வழங்கவேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். அனைத்து சத்துணவு அங்கன்வாடியில் பணியாற்றி பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்கள், கிராம சேவிகா முக்கிய சேவிகா கிரேடு -1, கிரேடு -2 ஆகியோர்களுக்கும், முறையாக ஓய்வூதியம் வழங்கவேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட கன்வினர் சி. அங்கம்மாள் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி. ஜீவா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட அமைப்பாளர் சி. காவேரி நிர்வாகிகள் சி. கருணாநிதி சி. பாபு, இளவரசி, ஆர். மல்லிகா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பி. மகேஸ்வரி, அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் கே. புகழேந்தி , ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் நிறைவுறையாற்றினார்.