கடத்தூர் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் தருமபுரி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமை கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் இரா .முனிரத்தினம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர். ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு வகையான கண் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரீன்பார்க் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி மாணவ, மாணவிகள்-1300 பேர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்-100 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர்.