தருமபுரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 நவம்பர், 2024

தருமபுரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது, காலை முதலே மக்கள் பட்டாசு வெடித்தும்,  கோவில்களில் சிறப்பு வழிபாடும் செய்து கொண்டாடினர்,  இந்த நிலையில் தீபாவளி அன்று பொதுமக்கள் பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டது.

 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தருமபுரி பஸ் நிலையம், ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, தருமபுரி நான்கு ரோடு ஆகிய பகுதிகளில், பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் தருமபுரி நகர போலீசார் வழக்குபதிவு செத்தனர் . 


அதே போல் தொப்பூர் அருகே கோம்பை - பாளையம்புதூர் சந்திப்பு அருகே அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த ஒருவர் மீதும், மொரப்பூர் ரயில் நிலையம் அருகே இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு விற்பனை செய்தவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகிலும், பென்னாகரம் கடைவீதி பகுதியிலும், ஏரியூர் பஜாரில் பட்டாசு வெடித்தவர் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad