Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கிராம மக்களின் செயலை வியந்து பாராட்டிய முன்னாள் அமைச்சர் பி . பழனியப்பன்.


அரூர் அடுத்த மாம்பட்டி ஊராட்சியில் கிராம மக்கள், விவசாயிகள், சமுக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தென்பெண்ணை ஆற்று உபரி நீரை ஜெனரேட்டர் மூலம் பைலைன் அமைத்து 400 மீட்டர் தொலைவில் உள்ள தேசபந்த பெரிய ஏரிக்கு நீர் எடுத்துச் சென்றனர்.


விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சமுக ஆர்வலர்கள் முயற்ச்சியை திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் பார்வையிட்டு மலர்தூவி விவசாயிகளில் முயற்சியை பாராட்டினார். மேலும் தமிழக அரசின் மூலம் இத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கிராம மக்கள், விவசாயிகள் சமுக ஆர்வலர்களிடம்  கருத்துகள் கேட்டறிந்தார். தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் ஏற்கனவே இருந்த குமரன் அனைக்கட்டு இருந்த இடத்தை 2 Km நடந்து சென்று பார்வையிட்டு 26 ஏரிகள் மற்றும் 8 குட்டைகளுக்கு நீர் எடுத்து செல்வது தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்து ஆலோசித்தார்.


நிகழ்வில் திமுகவின் அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் R.வேடம்மாள், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் A.சண்முகநதி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் C. தென்னரசு, மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், மாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சங்கிதா ராஜா, முன்னாள் மாவட்ட  இ. அணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட துணை அமைப்பாளர் P.V.சேகர் விவசாயிகள் சேகர், மகேந்திரன், கருணாநிதி, கோவிந்தசாமி, கலைவாணன், அய்யப்பன், ராகுல், பெரியசாமி, பெரியதம்பி, யாரப், ச.அபிஷேக், JCP.K மோகன், G.விமல் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் பொதுமக்கள் 100 க்கு மேற்பட்டோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies