பாலக்கோடு, பிப். 24:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்துநிலையம் முன்பு அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதிமுக நகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், மருத்துவர் சந்திரமோகன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் K. P. Anbazhagan, எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், M. G. Ramachandran (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெயலலிதா அவர்களின் வெண்கல சிலைகளுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி கிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சண்முகம், புதூர் சுப்ரமணி, வீரமணி, ரவி, கொளந்தை, கவுன்சிலர் விமலன், குருமணிநாதன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, கன்னையன், அவைத் தலைவர் முர்த்துஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜா, சாம்ராஜ், சரவணன், மாதையன், சின்னசாமி உள்ளிட்டோர் மற்றும் கட்சி முன்னோடிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)