நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அரூர் பகுதியில் நரிப்பள்ளி ஊராட்சி, பையர்நாய்க்கன்பட்டி ஊராட்சி, பெரியப்பட்டி ஊராட்சி, வேடகட்டமடுவு ஊராட்சியை சேர்ந்த பல்வேறு கட்சியிலிருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட நபர்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் அரூர் ஒன்றிய நிர்வாகி ஜெ.நவீன், தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் தாபா. M.சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் கேப்டன் K.விஜயகாந்த் மாவட்ட நிர்வாகி முருகன் மாவட்ட தொண்டரணி தலைவர் சுரேஷ் முனியப்பன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் கார்த்திக், அரூர் நகர செயலாளர் முரளி, அரூர் ஒன்றிய தொண்டரணி இணைச் செயலாளர் சக்திவேல், தருமபுரி கிழக்கு ஒன்றிய நிர்வாகி விக்கி, நல்லம்பள்ளி ஒன்றிய நிர்வாகி தேவா ஆகியோர் உடனிருந்தனர்.