Type Here to Get Search Results !

CA, ICWA, நிறுவன செயலாளர் தேர்வுகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant – Intermediate), நிறுவன செயலாளர் – இடைநிலை (Company Secretary – Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை (Cost and Management Accountant – Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பட்டய கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant – Intermediate), நிறுவன செயலாளர் – இடைநிலை (Company Secretary – Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை (Cost and Management Accountant – Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற விரும்பும் மாணாக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்ய வேண்டும். எனவே, மேற்படி பயிற்சியில் பங்குபெற்று ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியின மாணாக்கர்கள் பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு தருமபுரி, தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்களை நேரில் அனுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884