இராயப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 நவம்பர், 2024

இராயப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கினர்.


அரூர் அடுத்த இராயப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு வருகை புரிந்து அவசர உதவி எண் 100, 101, 108 தகவல் தெரிவித்தல், நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், தீ விபத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல், மின் விபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல், சமையல் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பாக பயன்படுத்துதல், நீர் நிலைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல், Good touch bad touch, பல்வேறு முதல் உதவி சிகிச்சைகள், snake catcher கருவி துணை கொண்டு பாம்பு பிடித்தல் போன்ற பல்வேறு  விழிப்புணர்வு கருத்துகள் உரிய  செயல் விளக்கம் மூலமும் மாணவர்களுக்கு  மிக சிறப்பாக விளக்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad