Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் டிசம்பர் 21, திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில மாநாடு குறித்து தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தருமபுரி பாமக மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. 


தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை தலைவர் சின்னசாமி, மாநில துணை செயலாளர் சிவசக்தி, மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இல.வேலுசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர்.


திருவண்ணாமலையில் வருகின்ற டிசம்பர்-21 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து 10,000 விவசாயிகளை பங்கேற்க அனைத்து ஒன்றியங்களிலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது, அனைத்து விவசாய பெருமக்களையும் சந்தித்தல் போன்றவற்றை மேற்கொள்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 


தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சி, அதனால் அழிந்து வரும் விவசாயம், குறைந்து வரும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 5 லட்சம் பேர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய அவல நிலை நிலவுகிறது. காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பும் திட்டமான தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.


நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், மாநில துணை தலைவர்கள் பி.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, நிர்வாகிகள் இராமகிருஷ்ணன், காமராஜ், பிரகாஷ், பாலாஜி, கோ.சின்னசாமி, சித்துராஜ், ஒ.கே.சுப்ரமணியம், ஆ.அன்பழகன், கே.இ.கிருஷ்ணன், தேவேந்திரன், பாலு, பாலசந்தர், தங்கராஜ், ஜெயலட்சுமி, சிவக்குமார், து.சத்தியமூர்த்தி, சாந்தி, சங்கர், கார்த்திகேயன், சத்திரியபிரபாகரன், நடராஜன், சாமிகண்னு, எம்.பி.வேடி, மகிமைநாதன், செந்தில், வெங்கடாசலம், தாமரைசெல்வன், செல்வி, ராமமூர்த்தி, ஈஸ்வரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


இறுதியில், நகர செயலாளர்கள் கி.வெங்கடேசன், வே.சத்தியமூர்த்தி ஆகியோர் நன்றி கூறினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies