இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராணி தலைமை வகித்தார். வட்டார வள மருத்துவ அலுவலர் D.அழகரசன் வளரிளம் பருவத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள், சமூகத்தில் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றை கூறி இறுதியில் கல்வி ஒன்றே பெண்களை நல்வழிப்படுத்தும் என்று பேசினார்.
இந்நிகழ்வில் சின்னாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருமதி R.பூங்கொடி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையளர், சுகாதார ஆய்வாளர் N. இளவரசன், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், சமூக நலத்துறை, ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக