Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விஜயதசமியை முன்னிட்டு ஆர். எஸ். எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நந்தகுமார் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ், கோட்ட பொறுப்பாளர் சந்திரசேகர்,  ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி அலுவலர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.ன் 100 ம் ஆண்டு தொடக்கவிழா, மற்றும்  விஜயதசமி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் 58 இடங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர், எஸ் ,எஸ் - ன்  அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்  நடைபெற்று வரும் நிலையில், அதனையொட்டி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள வாசவி மஹால் பகுதியில் இருந்து தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்  ஊர்வலமானது, கல்கூடப்பட்டி, மேல்தெரு,  ஸ்தூபி மைதானம், எம்.ஜிரோடு, பைபாஸ் சாலை, தக்காளிமண்டி வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.


அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. வடதமிழக ஆர் எஸ் எஸ் நிர்வாகி மனோகர், கலந்து கொண்டு ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் தோற்றம் செயல்பாடுகள், சேவைப் பணிகள் குறித்து விரிவாக பேசினார். மேலும்  தேசபக்தி, தேச ஒற்றுமை, பாரத நாட்டின் பெருமை, சாதி மத ஒழிப்பு, இளைஞர்களை ஒழுக்க சீலராகவும், தேச பக்தி உடையராகவும், எல்லோரும், ஓர் இனம், ஓர் குலம் என்ற கருத்தாக்கம் குறித்து விளக்கி பேசினர். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட எஸ்.பி.மகேஸ்வரன் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies