Type Here to Get Search Results !

சாதனையாளர்களை கௌரவிக்கும் மை தருமபுரி விருதுகள் 2024 விழா கொண்டாட்டம்.

மை தருமபுரி அமைப்பின் மூலம் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். இதற்கு உறுதுணையாக இருக்கும் நன்கொடையாளர்கள், குருதி கொடையாளர்கள், தட்டணுக்கள் கொடையாளர்கள் ஆகியோரை கௌரவிக்கும் விழா ஆறாம் ஆண்டாக தருமபுரி எர்ரப்பட்டியில் நடைபெற்றது. விழாவில் வாழ்நாள் சாதனையாளர்கள், வள்ளல் அதியமான், தட்டணுக்கள் நாயகன், தன்னார்வலர்கள், மனிதநேயர், செந்துளி நாயகன் என 200 நபர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


விழாவை மை தருமபுரி கௌரவத் தலைவர் CKM ரமேஷ் தலைமை தாங்கினர், நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக உயர்திரு DNC மணிவண்ணன், தருமபுரி மண்டல மருத்துவ கட்டுப்பாடு உதவி இயக்குநர் அதியமான் ஆகியோர் கலந்து கொண்டனர். மாருதி இரத்த வங்கி வெங்கடாசலம், செந்தில் குமார் டிப்பார்ட்மெண்ட் கார்த்திக் குமார், தீபா சில்க்ஸ் தியாகராஜன், செல்வ மாளிகை ராஜசேகரன், ரங்கா டிபார்ட்மெண்ட் பிரித்திவி, டெர்பி ஷோரூம் நரேன் தீர்த்தராமன், PSB டிபார்ட்மெண்ட் சுரேஷ் குமார், ஜீசஸ் கிரைஸ்ட் நவீன், பத்திர எழுத்தர் கணேசன், BGR மருத்துவர் ராஜேஷ், சவீதா உதயகுமார், மருத்துவர் தினேஷ் ராம், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
 

விழா முழுவதையும் மை தருமபுரி குடும்பத்தினர் ஒருங்கிணைத்தனர். மனிதநேயம் காப்போம் மனிதநேயம் போற்றுவோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies