தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை ஒட்டி பேனர் வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி விமல் என்பவர் அந்த ஊரில் பேனர் வைக்க முற்பட்ட போது அதை தடுத்து இங்கு தவெக பேனர் வைக்க கூடாது என்று சாமிசெழியன் மற்றும் இனமுரசு என்ற நபரகள் விமல் என்பவரை தாக்கி இருக்கிறார்கள்.
தகவல் அறிந்த உடன் இரவு 11 மணி அளவில் தவெக கட்சியின் கடத்தூர் ஒன்றிய செயலாளர் வே.தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் விரைந்து கடத்தூர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர் மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆய்வாளர் அவர்களை வலியுறுத்தியுள்ளனர்.