Type Here to Get Search Results !

சிக்கார்தனஅள்ளியில் பொது மக்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜெர்தலாவ் ஊராட்சிக்குட்பட்ட சிக்கார்தனஅள்ளி கிராமத்தில்  காவல்துறை சார்பில் ஊர் பொதுமக்களுக்கு  பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு கூட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன்  தலைமையில்  நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன்  முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறாமல்  தடுக்கவும், பொதுமக்கள்  தங்கள்  வீடுகளில் மூன்றாவது  கண் எனப்படும் கண்காணிப்பு கேமராவை பொருத்துதல் குறித்தும், ஊருக்குள் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் தெரிய வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தல், மேலும் 18 வயதிற்க்கு குறைவானவர்கள் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது.


தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை இயக்க கூடாது மற்றும் சைபர் க்ரைம் 155 என்ற எண்ணிற்கும் வங்கி மோசடிகள் குறித்து புகார்களுக்கு 200 பெண்கள் பாதுகாப்பிற்க்கு 181 சிறுவர் பாதுகாப்பிற்க்கு 1098 ஆகிய ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணிற்க்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், எனவும், பொருளாதார குற்ற தடுப்பு, போதை பொருள் தடுப்பதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்தும்  ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில்   பொது மக்களின் கருத்துக்கள்  கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பாலசுந்தரம், வீரம்மாள், உதவி காவல் ஆய்வாளர்கள் கோகுல், மணி, முனிராஜ், ஊர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies