சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில் போலீசார் அணிவகுப்புடன் தேசிய கொடிக்கு மாரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சப்- இன்ஸ்பெக்டர்கள் கோகுல், முனிராஜ், நிலைய எழுத்தர் ரவி, எஸ்.எஸ்.ஐக்கள் மணி, சிங்காரம், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.

