தருமபுரியில் செயல்பட்டு வரும் மை தருமபுரி தன்னார்வலர் அமைப்பின் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டம் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே நான்கு ஆண்டுகளாக மதியம் மற்றும் மாலை வேளைகளில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் சேவையை செய்து வருகின்றனர், இதன் மூலம் தினமும் 100க்கு மேற்பட்டோர் மக்கள் பசியாறிவருகின்றனர்.
இன்று 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக பெரியாம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நாயக் சாந்தலிங்கம் கலந்து கொண்டார், இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சுமார் 500 நபர்களுக்கு மதிய உணவு இனிப்புடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் இராணுவ வீரர் சாந்தலிங்கம் அவர்களுக்கு தங்கம் மருத்துவமனை மருத்துவர் இரா.செந்தில் மரியாதையை செய்தார். இந்த நிகழ்வில் மை தருமபுரி தன்னார்வலர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

