உலகம் முழுவதும் இயங்கிவரும் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் அமைப்பின் மண்டல அளவிலான நான்கு நாள் பயிற்சி முகாம் தருமபுரி அதியமான் அரண்மனை விடுதியில் நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுமார் 31பேர் பங்கேற்றனர்.
நிகழ்வில் ஜேசிஐ மண்டலம் 16ன் தலைவர் திரு. ஏழுமலை நிகழ்ச்சியை துவக்கிவைத்தார், சிறப்பு விருந்தினராக ஜேசிஐ மண்டலம் 29ன் தலைவர் திரு. சுந்தரேசன் கலந்துகொண்டார், இந்த பயிற்சி முகாமில் திரு. கிருஷ்ணமோகன், திரு. கவுசிக் கத்தூரி மற்றும் Dr. சம்பத் ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கினார்கள். பயிற்சியில் பங்குபெற்ற அனைவரும் தேர்ச்சிபெற்றனர் .
நிகழ்வின் நிறைவு விழாவில் ஜேசிஐ அமைப்பின் திரு. ராஜேஷ் சுப்பிரமணி, அசோக் R.பட், KS.சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்வை திரு. பிரேமானந்த் ஒருங்கிணைத்தார், ஜேசிஐ தருமபுரி கிளையின் தலைவர் திரு. விஜயகுமார், திட்ட இயக்குனர் திரு.ரவிக்குமார், துணைத்தலைவர் (பயிற்சி) திரு . தொல்காப்பியன், மற்றும் ஜேசிஐ தருமபுரி கிளையின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

