தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் (FOCUS BLOCK DEVELOPMENT PROGRAMME) வளர்ச்சிக் காரணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை மாநில திட்ட ஆணைய உறுப்பினர் திரு.கே.தீனபந்து, இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (13.08.2024) நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் (Focus block Development Programme) காரிமங்கலம் மற்றும் அரூர் வட்டாரங்களில் செயல்படுத்தபட உள்ளது. இதனைதொடர்ந்து, சம்மந்தப்பட்ட வட்டாரங்களின் வளர்ச்சி உத்தி அறிக்கை, தயார் செய்யப்பட்டு வட்டார ஆண்டுத் திட்டம் 2024-2025 (Block annual plan) தயார் செய்யவும், வட்டார உத்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ள வளர்ச்சி காரணிகள் (key Development Indicators) குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் அரூர் மற்றும் காரிமங்கலம் ஆகிய இரு வட்டாரங்களுக்கான வளர்ச்சி காரணிகள் (Key Development Indicators) துறை வாரியாகவும் திட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்ட குறியீடுகள் (KDI) தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்/கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி,) திரு.கெளரவகுமார், மாநில திட்ட ஆணைய அலுவலர், திரு.எஸ்.செல்வகுமார் உள்ளிட்ட மாவட்ட நிலையிலான அனைத்து முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)