மேலும் கூட்டமைப்பானது சுய உதவிக்குழுக்களின் கணக்குகளை பராமரிக்கவும் அவற்றை தணிக்கை செய்ய உதவுதல், குழுக்களிடையே வருவாய் பெருக்கும் செயல்பாடுகளை ஏற்படுத்துதல், குழுக்களிடையேயான பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைத்தல் போன்றவையும் கூட்டமைப்பின் பொறுப்புகளில் அடங்கும். மேலும், அரசு நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு கழகங்கள் போன்ற மகளிர் மேம்பாட்டிற்கான வெளி நிறுவனங்களோடு இணைந்து, அனைத்து சுய உதவிக்குழுக்களும் உறுப்பினர்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைள் கூட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, எதிர்வரும் 15.08.2024 (வியாழக்கிழமை) அன்று இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் உரிய முறையில் கூட்டப்பொருளுடன் நடத்திடவும், அதில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளலாம். இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

