கெண்டேன அள்ளி ஊராட்சி கெண்டேன அள்ளி கிராமத்தில் உள்ள சர்வே எண் 201/2சி2 ல் உள்ள அரசு புறம்போக்கு நிலம் சுமார் 50 சென்ட் நிலத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி என்பவர் சென்ற வாரம் பஞ்சப்பள்ளியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கெண்டேன அள்ளி ஊராட்சிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை மாது, சித்ரா, மகேந்திரன், மகாலிங்கம் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் உடனடியாக நிலத்தினை மீட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஏதுவாக பாலக்கோடு வட்டாட்சியர் ரஜினி அவர்கள் நில அளவையர் மௌலீஸ்வரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி,ஊராட்சி மன்ற து.தலைவர் தர்மன் ஆகியோர் கொண்ட குழுவினை அமைத்தார்.
இந்நிலையில் இன்று நிலம் அளவிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் நில அளவையர் மௌலீஸ்வரன் இடம் இது எங்கள் நிலம் நீங்கள் உள்ளே நுழைய கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் நில அளவிடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் கெண்டண அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஊர் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வட்டாட்சியர் அவர்கள் நேரில் வருகை தந்து நிலத்தினை மீட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

