தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் பட்டாபி நகரில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பாலக்கோடு தாசில்தார் ரஜினி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெகதீசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம் பஞ்சப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சமாதானம் செய்ததை தெடர்ந்து ஆக்கிரமிப்புக்கள் முழுமையாக அகற்றப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பின் போது 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

