தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிநகர் 5வது தெருவில் அமைந்திருக்கும் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிதிருவிழா நடைபெற்றது முன்னதாக காலை 7 மணிக்கு விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து அக்னிசட்டி எடுத்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, பிற்பகலில் பம்பைகுழு இசையுடன் சிவன் சக்தி ஆட்டத்துடன் கஞ்சி ஊர்வலத்துடன் பூங்கரகம் தொடங்கியது.
இவ்ஊர்வலம் திருவிக நகரில் தொடங்கி கச்சேரிமேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று திருவிக நகரில் முடிவுற்றது இந்நிகழ்ச்சிக்கு தேவகி தலைமை தாங்கினார் இதில் சாந்திசின்ராசு கவிதா மணிலா பர்வீன் ஷோபனா சின்னத்தாய் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

