தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா அவர்கள் கலந்துகொண்டு அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கி அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் வை.திருலோகன் தாதை வேடியப்பன் ராஜ்குமார் மின்னல் காவேரி முகாம்செயலாளர் சுஜீத்குமார் சாய்ராம் ராஜசேகர் கதிரவன் வார்டு உறுப்பினர் முனியம்மாள் சின்னபையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

