இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று விவசாய நிலத்தில் மனைவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது கணவன் மனைவி இருவருக்கும் இடையே வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் மனைவியின் தலை மீது பெரிய கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து அவரும் மனைவி இறந்த துக்கத்தில் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஏரியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் பென்னாகரம் டிஎஸ்பி. மகாலட்சுமி ஏரியூர் இன்ஸ்பெக்டர் யுவராஜ் சடலங்களை கைப்பற்றி தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தகராவில் மனைவி மீது கல்லை போட்டு கொன்றுவிட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

