78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் வரை இருசக்கர பேரணி நடைபெற்றது.
இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி தியாகி சுப்பிரமணிய சிவா மணி மன்டபம்வரை பேரணியாக சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

