தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் தாசரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சுதந்திர தின விழா முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
விழாவில் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்க லந்து கொண்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்

