பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி போலி ஒத்திகை பயிற்சியானது சிறப்பு நிலை அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நரசிம்மன், வினோத்குமார், செம்மலை, ராஜ்குமார், கார்த்திக் ஆகியோர் முதலுதவி பயிற்சியளித்தனர்.
தீத்தடுப்பு நடவடிக்கைகள், தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி, எலும்பு முறிவு ஏற்படும் போது செய்ய வேண்டிய முதலுதவி உள்ளிட்டவைகள் பற்றி போலி ஒத்திகை முதலுதவி பயிற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி மற்றும் ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி ஆகியோர் செய்திருந்தனர்.

