இதில் நான்கு ஒப்பந்ததாரர்கள் பங்கெடுத்ததாகவும், அதில் இருவரின் ஒப்பந்தத்தை மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததாகவும், மேலும் இரண்டு போட்டியாளர்களின் ஒப்பந்த படிவத்தை துணைச் சேர்மன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் இணைந்து, பிடுங்கிச் சென்றதாக பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் தகவல் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த டெண்டர், இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, இன்று மூன்றாவது முறையாக நடைபெற்றது. இதில் பெருமாள், தேன் தமிழன், அருள், ராஜேந்திரன் என 4 ஒப்பந்ததாரர்கள் பங்கெடுக்க வந்தனர். அப்போது பெருமாள் மற்றும் தேன் தமிழன் ஆகிய இருவரின் ஒப்பந்த படிவத்தை, பேச்சு வழக்கில், துணை சேர்மன் தனபால் பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் சொற்களை உபயோகித்தனர். திட்டமிட்டு இவர்கள் இருவரின் ஒப்பந்த படிவத்தை பிடுங்கி, பிழையாக, முறையான ஆவணங்கள் இல்லாதவாறு, துணை சேர்மேனே ஒப்பந்த பெட்டியில் ஒப்பந்தத்தை செலுத்தியதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் இது குறித்து எந்த கவலையும் படாத வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா மற்றும் அலுவலர்கள். மாலை 4:30 மணிக்கு டெண்டர் பெட்டியை திறந்து, சீல் வைக்கப்பட்டிருந்த நான்கு படிவங்களை பிரித்தனர். மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று பின்பு டெண்டர் முடிவு அறிவிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா அவர்கள் தெரிவித்தார்.
திட்டமிட்டு ஒப்பந்ததாரர்களை புறக்கணித்து, அரசுக்கு சுமார் 30 லட்சம் வரை நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் டெண்டர் நடத்தப்பட்டு இருப்பது, இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏரியூர் போலீசார் தலையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலந்து செல்ல வைத்தனர்.


