தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் செழியன் தலைமையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி முன்னிலையில் பென்னாகரம் பகுதியில் மூலதனம் மானியத் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம், கிருஷ்ணாபுரம் காட்டுக்கொள்ளை பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி என அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் மனு அளித்திருந்த நிலையில் மனுக்கள் குழு இன்று நேரில் ஆய்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கி மருத்துவர்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறதா என்பது குறித்தும், மருத்துவமனை விரிவாக்க புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் நேரில் ஆய்வு கொண்டனர்.
இந்த குழுவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர், ஓ.ஜோதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர், கு.சின்னப்பா செய்யூர் சட்டமன்ற உறுப்பினர், மு. பாபு ஆகியோர் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் சேய் நலன் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக பயன்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

