தமிழக அரசு தற்போது நடத்திய சமூக பொருளாதார கணக்கெடுப்பில், பாலக்கோடு காரிமங்கலம் ஆகிய 2 ஒன்றியத்தில் உள்ள குருமன்ஸ் இன மக்கள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும், பெயரளவில் ஒரு சில கிராமத்தில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தி உள்ளதாகவும், பேளாரஅள்ளி, கரகத அள்ளி, வேடம்பட்டி, நீலஞ்சனூர், கோவிலூரான் கொட்டாய், சீரியம்பட்டி, பஞ்சப்பள்ளி, நாகனம்பட்டி உள்ளிட்ட 90 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் குருமன்ஸ் இன மக்கள் குறித்து இதுவரை முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், இதனால் பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும், எனவே உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தங்கள் இன அடையாளமான நெற்றியில் மஞ்சள் பூசிக் கொண்டும், கம்பளி போர்த்தி கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் திம்மன், மாநில துணை பொது செயலாளர் பிரியாத் குமார், மாநில துணைத் தலைவர் கண்ணன், மாநில பொருளாளர் பச்சமுத்து வழக்கறிஞர் ரவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

