இது குறித்து உடனடியாக பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த பாலக்கோடு காவல் துறையினர் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு நேரில், சென்று குழந்தையை பார்த்து மருத்துவர்களிடம் சிகிச்சையில் இருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கினார்.
அதனை தொடர்ந்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தைகள் மையத்திற்க்கு அனுப்பி வைத்தனர். சமீப காலமாக தர்மபுரி மாவட்டத்தில் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் பிறந்து சில மணி நேரத்திலேயே பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

