தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பூதனஅள்ளி கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவன், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவன், தாயின் அரவணைப்பில் மட்டுமே படித்து முன்னேறிய கிராமத்தைச் சேர்ந்த மாணவன், எந்தவிதமான ஆதரவும் இல்லாமல். இன்று வரையிலும் கூலி வேலை செய்து தனது மகனை மருத்துவராக்கி சாதனை புரிந்துள்ளார் அவரது தாய்.
நல்லம்பள்ளி தாலுக்கா, பூதனஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் தனது அடிப்படை கல்வியை படித்து, நார்த்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து, அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர் ஹரிகரன் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை தொடர உள்ளார்.

