Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் புதிய டி.எஸ்.பியாக மனோகரன் இன்று பொறுப்பு ஏற்பு.


தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காரிமங்கலம், மகேந்திமங்கலம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி ஆகிய காவல்நிலையங்களை உள்ளடக்கிய காவல் எல்லையை கொண்ட பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பியாக பணியாற்ற சிந்து அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்திற்க்கும், நாமக்கல் மாவட்டத்தில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த  மனோகரன் அவர்கள் பாலக்கோடு டி.எஸ்.பியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து  இன்று மனோகரன் அவர்கள் பாலக்கோடு டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.எஸ்.பி.மனோகரன் குற்ற சம்பவங்கள் நடப்பது தெரிய வந்தால், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies