நிகழ்ச்சியில் பேசியவர்கள், மதுரையில் பிறந்து கன்யாகுமரியில் பயிற்சி முடித்து பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பதவி ஏற்ற சிந்து அவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பாலக்கோடு உட்கோட்ட பகுதியான பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இளவயது திருமணம், பாலியல் குற்றங்கள், போதை பொருட்கள் தடுப்பு, சமூக விரோத செயல்கள் போன்ற குற்ற செயல்களை தடுத்து சட்டம்ஒழுங்கை பாதுகாத்து சிறப்பான முறையில் பணியாற்றி தற்போது இங்கிருந்து திருவள்ளுர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பியாக பணி மாறுதலாகி செல்லும் டி.எஸ்.பி சிந்து அவர்கள் மேலும் மேலும் அவரது பணியில் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக டி.எஸ்.பி. சிந்து அவர்களை போலீசார் மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். போலீசார் அனைவரும் டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு மதுரையின் தங்கம், சிங்கப்பெண் என பெயர் சூட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பாலசுந்தர், சுப்ரமணி, பார்த்திபன், வீரம்மாள் மற்றும் உதவிகாவல் ஆய்வாளர்கள், எழுத்தர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் திரளாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர். இந்நிகழ்ச்சி போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


