கம்பைநல்லூர் அருகே உள்ள கடம்பரஹள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வை.திருலோகன் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் பின்னர் ஊரின் மையபகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பில் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிழ்ச்சியில் முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் தேவகிருஷ்ணன் கம்பைநல்லூர் நகர செயலாளர் ராபர்ட்சொக்கன் அரூர் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் ராஜ்குமார் மொரப்பூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெய்பீம் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் திருமால் முகாம் நிர்வாகிகள் விவேக்வளவன் வெங்கடேசன் அம்பேத்கனிஷ்வளவன் முருகன் பெரியண்ணன் அபில்ராஜ் சாந்தகுமார் பழனி ரஞ்சித் பரசுராமன் பெ.திருமாவளவன் சபரிவளவன் தருமன் பிரதாப் மகளிரணி செயலாளர் இளையராணி நதியா மாதம்மாள் மின்னல்காவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

