ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்தானது தற்போது குறைந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலும் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் நீர்வரத்து குறைந்து தற்போது வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக நீடித்து வரும் நிலையில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதித்து உள்ளது . இருந்தபோதிலும் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் காரணமாக தொடர்ந்து அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கான தடை 33 வது நாளாக நீடித்து வருகிறது.

