தருமபுரி மாவட்டம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி (23.8.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் அரூர் கோட்டாட்சியர் திரு வில்சன் ராஜ்குமார் அவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மங்கையர்க்கரசி அவர்கள் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவியர்கள், காவல்துறையினர் பங்கேற்று அரூர் ரவுண்டானா முதல் பேருந்து நிலையம் வரை மனித சங்கிலியாக சுமார் ஒரு மணி நேரம் நடத்தினர். மேலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கோபிநாத் அவர்கள் ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

.jpg)