ஏரியூர் அருகே உள்ள இராம கொண்ட அள்ளியில் உள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலயத்தில் நேற்று இரவு மகா சங்கடஹரை சதுர்த்தி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது கணபதி ஹோமம் கோ பூஜை கள் நடைபெற்றன அதனை தொடர்ந்து ஸ்ரீ சங்கடகர கணபதிக்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இந்த பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஐயாரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடந்த ஓராண்டாக பூஜிக்கப்பட்ட ஐந்து முக ருத்ராட்சம், மஞ்சள் கயிறு, சிவப்பு கயிறு, தீர்த்த பிரசாதம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி, ஆன்மீக ரத்னா மாதையா சுவாமிகள் மற்றும் விழா குழுவின் மேற்கொண்டனர்.

