Type Here to Get Search Results !

தருமபுரி குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.


தமிழக முழுவதும் உள்ள உள்ளூர் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்து  குளிர்பானங்கள் தரம் அறிய மாதிரி சேகரித்து பகுப்பாய்வு அனுப்பிட மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டதன் அடிப்படையில்,  


தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் தர்மபுரி  நகராட்சி பாபா சாகிப் தெரு, ஏ.கொல்லள்ளி பகுதி, அன்னசாகர பகுதி  மற்றும் தடங்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் உள்ளூர் குளிர் பான தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.  

ஆய்வில் தயாரிப்பு நிறுவன  சுற்றுப்புறம் மற்றும் உபகரணங்கள், மூலப்பொருள்கள், அடைக்கப்பட்ட குளிர்பான பெட்பாட்டில்களின், பாதாம் உள்ளிட்ட பால் பானங்கள், கோலி சோடா பாட்டில்கள், உள்ளூர் கோலா, பன்னீர், ஆரஞ்சு பாட்டில்கள் தயாரிப்பு முறை, உபயோகப்படுத்தும் குடிநீர், மூலப் பொருட்கள் மூலப் பொருட்களில் காலாவதி தன்மை ஆகியவற்றுடன் தயாரித்த குளிர்பானங்களில் லேபில்கள், தயாரிப்பு தேதி, முடிவு தேதி, பேட்ச் எண் , உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்கள் உரிய முறையில் அச்சிடப்பட்டுள்ளனவா, தயாரிக்கும் இடம், தயாரித்த  குளிர்பானங்கள் இருப்பு,பராமரிப்பு, உபரி கழிவுகள் முறையாக வெளியேற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டது. 


இன்றைய ஆய்வில் தர்மபுரி நகராட்சி பாபா சாகிப் தெரு மற்றும் ஏ.கொல்லள்ளியில் பகுதியில் உள்ள குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் நெருக்கடியான சுகாதாரமற்ற இடத்தில் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதும், தயாரித்த உள்ளூர் கோலா உள்ளிட்ட குளிர்பானங்களை பல்வேறு பிற கம்பெனி லேபிள்கள் உள்ள கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு தயாரித்து அனுப்பியதும், அனுப்ப இருப்பு வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.  


மேற்படி குளிர்பானங்களை அப்புறப்படுத்தி தங்களின் உணவு பாதுகாப்பு உரிம எண்ணுடன்  கூடிய தன் கம்பெனி லேபிள்கள், மூடிகளில்(கேப்-கார்க்) அச்சிட்டு தயாரித்து விற்பனைக்கு அனுப்ப எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் இரு கம்பெனிகளும் குடியிருப்பு பகுதிகளில் உள்ளதால் அசம்பாவித நடைபெற வாய்ப்புள்ளதால் இடத்தை மாற்றவும், உரிய  உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் பின்பற்றி தயாரிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கோலிசோடாக்கள் மட்டும் தற்சமயம் விற்பனை செய்யவும் அதுவும் உரிய விபரங்கள் அச்சிடப்பட்டு பாட்டில்களில்  ஒட்டி விற்பனைக்கு அனுப்பிட அனுமதிக்கப்பட்டது. பிற கம்பெனி  நிறுவனங்கள் பெயர் உள்ள, லேபிள் உள்ள குளிர்பானங்கள் கண்டிப்பாக விற்பனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 


ஏ. கொல்லள்ளி பகுதியில் இயங்கி வரும் சோடா கம்பெனி அறவே இயங்க தடை விதித்து, இடத்தை வேறு இடத்திற்கு மாற்றிய பின்  உணவு பாதுகாப்புத்துறை பார்வையிட்டு காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமம் பதிலாக புதிய உணவு பாதுகாப்பு உரிமம் விண்ணப்பித்து,  உரிய ஆய்வு ,அனுமதிக்குப்பின் குளிர்பானங்கள் விற்பனை செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு, கம்பெனி பூட்டி மூடப்பட்டது.


இதேபோல் தடங்கம், கலெக்டர் பங்களா  சாலையில் குமரகிரி மில் அருகில் இயங்கி வரும்  குளிர்பானங்கள் மற்றும் பாதாம் பால், உள்ளிட்ட ஆல்கஹால் அல்லாத குளிர்பான தயாரிப்பு நிறுவனம் உரிய சுகாதாரம் இன்றியும், பறவை இனங்கள், பூச்சிகள், தூசு உள்ளிட்ட அயற் காரணிகள் எளிதில் தயாரிப்பு பொருள்களில் கலந்திட வழிவகை உள்ளதும், காலாவதியான மூலப்பொருட்கள் அகற்றப்படாமல் வைத்து இருந்ததும்,  தயாரிக்கப்பட்ட பாதாம்பால் குளிர்பானம் பாட்டில்கள்  உரிய வகையில் பராமரிக்கப்படாததும் கண்டு உடனடியாக  அப்புறப்படுத்தப்பட்டது. 


மேலும் உபகரணங்கள் துருப்பிடிக்க ஏதுவாகவும், தயாரிப்பு கூடம் உரிய சுகாதாரமற்று காணப்பட்டது அதிர்ச்சி அடைய வைத்தது. கம்பெனியை உடனடியாக மூடச் செய்து  ஏழு தினங்களுக்குள் மேற்படி குறைபாடுகள் களைந்து, ஆய்வுக்கு பின் அனுமதித்தளித்த பிறகு தயாரிப்பு பணியை செய்திட வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது . உடன் பாதாம்பால் ணகுளிர்பானம் தரமறிய  உணவு மாதிரி சேகரம் செய்யப்பட்டது.  இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் தொடர உத்தரவிட்டுள்ளதாக நியமன அலுவலர் தெரிவித்தார்.


உணவு பொருள் சார்ந்த புகாருக்கு 9444042322 என்ற எண்ணிற்கு அல்லது தமிழ்நாடுஉணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies