தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி.கொல்ல அள்ளி கிராமம்,சோமன அள்ளி பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்கு மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக எட்டு ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.
கோயில் நிலங்களில் இந்துசமய அறநிலையத்துறை ஆனையரால் அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே அரசோ,அரசுசார்ந்த நிறுவனங்களோ அல்லது தனி நபர்களோ நுழைந்து பணிக்களை மேற்கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் பி.கொல்ல அள்ளி ஊராட்சி தரப்பில் அங்கு மாரியம்மன் கோவில் தரப்பில் இயந்திரங்கள் மற்றும் பணி ஆட்களை கொண்டு சாலை அமைப்பு பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்ததும் தகவல் அறிந்த திருத்தொண்டர் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆ.இராதாகிருஷ்ணன் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
அதனையொட்டி தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த பாலக்காடு வட்டாட்சியர் சாலை அமைக்கும் பணினை தடுத்து நிறுத்தினார் பாதுகாப்புகாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

