Type Here to Get Search Results !

பாலக்கோடு அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா கோலாகலம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பாலக்கோடு அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நம் நாட்டின் 78 வது சுதந்திர தினப விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் அன்பு வளவன் வாழ்த்துரை வழங்கினர் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தண்டாயுதபாணி பள்ளி தலைமை ஆசிரியர் அருளானந்தன் முன்னிலை வகித்தனர்‌.


இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட துணை தலைவர் பி.கே.சிவா பள்ளி மேலாண்மை குழு  உறுப்பினர் கவுன்சிலர் குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்‌.


விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள வழங்கி சிறப்பிக்கப்பட்டது குழந்தைகளின் பெற்றோர்கள் திரளாக வந்திருந்து விழாவை கண்டுகளித்து நம் இந்திய நாட்டினுடைய சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். விழாவில் பள்ளி குழந்தைகள் நடனம் பேச்சு, தேச தலைவர்கள் வேடம், கவிதை வாசித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பெற்றோர் சங்க தலைவர் தண்டாயுதபாணி அவர்கள் இனிப்பு  வழங்கி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். 


விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர்கள்,மற்றும் பணியாளர்கள் அனைவரும் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies