தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கிராமசபை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது கூட்டத்தில் மாற்று திறனாளி நலத்துறை அதிகாரி கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன தேவை என்ன இருக்கிறது அவர்கள் எவ்வாறு பயன் பெற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடத்தில் விளக்கி கூறினார்.
மேலும் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி செயலர், கணக்காளர், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி அமைப்பாளர் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர் கலந்து கொண்டனர்.

