தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கர் பசுவாபுரம் சமுதாயகூடத்தில் இன்று காலை 10 மணி முகாம்நடைபெற்றது. இம்முகாமிற்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகம் பொறுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு பிரிவு சஞ்சீவி குமரன் தலைமை வகித்தார். கடத்தூர் ஒன்றிய .வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, மீனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் வீட்டுமனை,இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை,மின்சாரம், வேளாண்மை,வனத்துறை,தொழிலாளர் நலம்,சமூக நலத்துறை,மகளிர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சுமார் 1000 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.
இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பசுவாபுரம் பழனியம்மாள் ஜெயராமன், சிந்தல் பாடி பத்மாவதி சரவணன், வகுத்தப்பட்டி தவமணி மணி , கோபிசெட்டிபாளையம், கல்யாணசுந்தரம் ஊராட்சி செயாளர்கள். பட்டாபி ஞானம், சேகர், கருங்கண்ணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

