Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டத்தில் மாநில அரசின் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் மிக பெரிய மோசடி.


தர்மபுரி மாவட்டத்தில் Farmer development agriculture Co-opareative society Ltd என்கிற பெயரில் புதிய கூட்டுறவு வங்கி ஒன்று தர்மபுரி மாவட்டத்தில்,  1.தர்மபுரி, 2.நல்லம்பள்ளி, 3.ஜருகு, 4.பென்னாகரம், மற்றும் 5.ஊத்தங்கரை ஆகிய ஊர்களில்  கடந்த 20/01/ 2024. திரு.வெற்றிவேந்தன் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.


இது மாநில அரசு உதவியுடன் கிராமபுற விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு  கடன் வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது என்றும், மாநில அரசின் நிதி உதவியுடன் நடத்தபடுவதாகவும்,  இதில் வேலையில் சேரும் நபர்களுக்கு அரசு வேலையை போன்று நிரந்தர வேலை என்றும் ESI, PF, Medical Insurance என அனைத்து வசதிகளும் உண்டு எனவும் ஆசை வார்த்தைகளை கூறி, இதில் பணியில் சேர வேண்டுமானால், அரசாங்கத்திற்கு Deposit பணம் கட்ட வேண்டும் எனவும், பணியின் தன்மை கேற்ப ரூ, 60000 முதல் ரூ, 300000 வரை சுமார்  100 க்கும் மேற்பட்ட படித்த வேலைவாய்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரிடம் சுமார் ரூபாய் 1கோடிக்குமேல் வசூல் செய்தனர், அதுமட்டுமின்றி இந்த வங்கியில் பெண்கள் கடன் வசதி பெற உறுப்பினராக வேண்டும் என்றும் அதற்காக ரூ.250 முதல் ரூ.500 வரை  சுமார் 1000 க்கும் மேற்பட்ட கிராமபுற பெண்களிடம் ரூ. 200000 வசூல் செய்து அந்த பெண்களுக்கும்  எந்த விதமான கடனும் கொடுக்கவில்லை, இலட்ச கணக்கில் வட்டிக்கு வாங்கி பணம் கட்டி பணியில் சேர்ந்தவர்களுக்கு முதல் இரண்டு மாத சம்பளம் மட்டுமே கொடுத்தார்கள், அடுத்த வந்த மாதங்களில் முறையாக சம்பளமும் கொடுக்கவில்லை, இதனை அடுத்து தர்மபுரி B1  காவல் நிலையத்தில் 10  ஊழியர்கள் தங்கள் ஏமாற்ற பட்டதாகவும் தங்கள் 3 மாத சம்பளம் மற்றும் deposit பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் 3/07/2024 அன்று புகார் செய்தார்கள், காவல்துறையினர் தலையீட்டால் ஒரு மாத சம்பளம் மட்டுமே கொடுத்தனர். 


இதனை தொடர்ந்து இந்த நிர்வாகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் இது ஒரு மிக பெரிய மோசடி என்றும் நாங்கள் பணிக்கு வர விரும்பவில்லை எனவே எங்களது மீத சம்பளம் மற்றும் deposit பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கேட்டு பலர் பணியில் இருந்து விலகி விட்டார்கள். அதற்கு பின்னர் 3 மாத சம்பள பாக்கியை கேட்டு அவர்களிடம் சென்றால் 20 க்கும் மேற்பட்ட அடி ஆட்களை வைத்து கொலை மிரட்டல் விடுகிறார்கள். 


இதில் பணியாற்றும் 60க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளமும் வழங்கவில்லை,  கடன் கொடுப்பார்கள் என்று நம்பி பணம் கட்டி உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கும் இதுவரை எந்த கடனும் கொடுத்ததில்லை, பின்னர் இந்த வங்கியை நடத்தும் வெற்றிவேந்தன் மற்றும் கலைவாணி ஆகியோரை பற்றி விசாரித்தால் இவர்கள் வேப்பிலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்றும், ஊரை விட்டு வந்து  10 வருடங்களுக்கு மேல் ஆகிறது, இவர்கள் மிக பெரிய மோசடி கும்பல், வங்கியை பற்றிய எந்தவித அடிப்படை அறிவு கூட கிடையாதவர்கள் என்றும் வசூல் செய்த பணத்தை வேறு ஏதோ பங்கு சந்தையில் முதலீடு செய்து விட்டார்கள் எனவும் தகவல் தெரிய வருகிறது.


கட்டிய பணத்தை கேட்டால் தாங்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், காவல்துறை தாங்கள் சொல்வதை தான் கேட்பார்கள், தங்களை எதுவும் செய்ய முடியாது மீறி கேட்டால் அடி ஆட்களை வைத்து மிரட்டுகிறார்கள். வேறு சமுதாயமாக இருந்தால் சாதிய பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். இவ்வளவு பிரச்சினைக்கு பின்னரும் இந்த மோசடி கும்பல் வேலை கொடுப்பதாக கூறி அப்பாவி இளைஞர்களிடம் தினமும் இலட்ச கணக்கில் பணம் வசூலித்து கொண்டே இருக்கிறது.


எனவே இந்த மோசடி கும்பலை நம்பி எவரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம், இந்த வங்கி, அரசின் அனுமதி பெற வில்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்தவொரு அனுமதியும் பெற வில்லை, இந்த வங்கிகள் இயங்கும் கட்டிடங்களுக்கு இதுவரை வாடகை பணமும் கட்ட வில்லை,  எனவே இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மாவட்ட ஆட்சியர், மற்றும் முதலமைச்சரின் தனி பிரிவு ஆகியவற்றில் புகார் அளிக்க இருக்கின்றோம். இவர்களிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள், தொடர்பு கொள்ளவும், என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies