தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான தாமரை ஏரி, மணியகாரன்கொட்டாய் ஏரி, எர்ரணஅள்ளிஏரி, தண்டுகாரனஅள்ளி ஏரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகளில் அரசு அனுமதி இன்றி இரவு நேரங்களில் அதிகாரிகளின் கண்ணில் மண்னை தூவி சில சமூக விரோதிகள் தொடர்ந்து சட்டவிரோதமாக நெரம்புமண் கடத்தி வந்தனர்.
இந்நிலையில் எர்ரனஅள்ளியி பகுதியில் சட்ட விரோதமாக நொரம்பு மண் கடத்துவதாக பாலக்கோடு தாசில்தார் ரஜினிக்கு கிடைத்த தகவலை அடுத்து தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்க்கு சென்ற போது டிப்பர் லாரியில் நொர்மபுமண் அள்ளி கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் கடத்தல் கும்பம் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
உடனடியாக நொரம்பு மண்னுடன் 15 இலட்ச ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரியை பறிமுதல் செய்து பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில் பொப்பிடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் குமார் (வயது.45) என்பதும் சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தியதும் தெரிய வந்தது. இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வரை தேடி வருகின்றனர்.

