தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரைஆலை, வெள்ளிச்சந்தை, ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் முனைவர். தொல்.திருமாவளவன் அவர்களின் 62-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் இராசகோபால் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கி, தொல். திருமாவளவன் அவர்களை வாழ்த்தி பேசினார். விசிக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புக்கள் வழங்கியும் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
இவ்விழாவில் காரிமங்கலம் ஒன்றியசெயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் குமார், நிர்வாகிகள் தமிழரசன், விஜயாகாந்த, விஜய்பாரத், பெருமாள், வெற்றி, சூர்யா, மணி, கந்தவேல், ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் என ஏராளமான கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

